{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "q38gdvt4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/q38gdvt4/", "kind": "article", "headword": "உத்திரம்", "romanization": "uttiram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:50.851844+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இருபத்தேழு நாள் மீன்களுள் பன்னிரண்டாவதாகும்.", "body_ta": "இருபத்தேழு நாள் மீன்களுள் பன்னிரண்டாவதாகும். இதற்குப் பால்குனி, பங்குனி, கடைச்சனி, பொய்கை, மான்ஏறு, கதிர்நாளை ஆகிய பெயர்கள் உண்டு. இது 4 மீன்கள் கொண்டது. பூரமும் உத்திரமும் சேர்ந்து ஒரு கட்டிலின் நான்கு கால்கள் போல் உருவம் பெற்றுள்ளன. உத்திரம் சூரியனுக்குரிய மூன்று நாள்மீன்களுள் ஒன்று. இது சிம்ம இராசியில் ஒரு பாதமும் கன்னி இராசியில் ஏனைய மூன்று பாதமும் கொண்டதாய் உள்ளது. இதனால் இதைத் தலையற்ற நாள் மீன்களுள் ஒன்றாகக்கூறுவர். திருமணம், மனை கோலுதல், குடி புகுதல், வழிநடை ஆகியவற்றிற்கு நல்ல நாளாக இது கொள்ளப்படுவதில்லை. உத்திர நாள்மீனில் பிறந்த ஒருவர் சூரிய திசையில் பிறந்தவர். உத்திரம் சிம்மராசியில் 26 பாகை 40 கலை முதல் 30 பாகை வரையிலும் அமைந்து கன்னி இராசியின் முதல் 10 பாகை வரையிலும் இடம் பெற்றுள்ளது. எனவே, உத்திரம் சூரியனுக்குரிய சிம்ம வீட்டிலும் புதனுக்குரிய கன்னி வீட்டிலும் அமைகிறது. ப.ரா.க."}}