{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "psefzqev", "url": "https://nigandu.oliyonresearch.com/e/psefzqev/", "kind": "article", "headword": "கீரை", "romanization": "kīrai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:26.702754+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "தாவரப் பொருளான கீரைகள் சத்துக்கள் மிகுந்த உணவுப் பொருட்களாகும்.", "body_ta": "தாவரப் பொருளான கீரைகள் சத்துக்கள் மிகுந்த உணவுப் பொருட்களாகும். விரைந்து வளரும் தன்மை கொண்ட கீரைகள் எளிதாகக் கிடைக்கக் கூடியவையாகும். அன்றாட உணவில் நமக்கு இன்றியமையாது தேவைப்படக்கூடிய தாதுப் பொருட்களையும் கால்சியத்தையும் இரும்புச் சத்தையும் கீரைகள் அளிக்கின்றன. பிற உணவு வகைகளில் இச்சத்துக்கள் மிகக் குறைவான அளவிலேயே கிடைக்கின்றன. எனவே, இச்சத்துக்கள் மிகுந்த கீரைகள் உணவில் மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. மேலும், பாஸ்வரம், செம்பு, மக்னீசியம் போன்ற சத்துப் பொருட்களும்கூட ஓரளவு கீரைகளில் உள்ளன. மற்றும் புரதச்சத்தும் உயிர்ச்சத்தான வைட்டமின்களும் கீரைகளில் அடங்கியுள்ளன.\n\nசுவையும் சத்தும் பயனுமிக்கக் கீரைகளாக அரைக்கீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி, மணித்தக்காளி, வெந்தயக் கீரை, புதினா, கொத்துமல்லி, கரிவேப்பிலை, முருங்கைக்கீரை போன்றவைகள் கருதப்படுகின்றன. இவற்றில் வைட்டமின் ‘ஏ’ உயிர்ச் சத்து அதிக அளவில் கிடைக்கின்றன.\n\nஇன்னும் சிலவகைக் கீரைகள் நோயைத் தீர்க்கும் தன்மையுடையனவாக உள்ளன. அவற்றுள் கீழாநல்லி போன்றவை குறிப்பிடத் தக்கவைகளாகும். கீரைகளை எளிதாக வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் வளர்த்துப் பெறலாம். குறைந்த செலவில் எளிதாகப் பெறக்கூடிய கீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் நாம் நலமாக வாழ வழியேற்படும்."}}