{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "p59njnqy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/p59njnqy/", "kind": "article", "headword": "அக்கிபூசை", "romanization": "akkipūcai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:30.389935+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "புத்தரைக் குறித்துக் கொண்டாடப்பெறும் பண்டிகைகளுள் ஒன்று.", "body_ta": "புத்தரைக் குறித்துக் கொண்டாடப்பெறும் பண்டிகைகளுள் ஒன்று. இப்பண்டிகையை ஏழு நாள்கள் கொண்டாடுவர். இதைப் பேரரசர் அசோகர் கொண்டாடினார் என்று கூறுவர். புத்த பெருமானின் உருவத்தை அசோகரின் காலத்தவரான\n\nமகாகாளர் என்பார் வடித்துக் கொடுத்தார் என்றும் கூறுவர். இக்கொண்டாட்டத்தின் போது பேரரசர் அசோகர் உண்ணா நோன்பிருந்தார் என்றும், இவ்வுருவத்தைக் கண்களைச் சிமிட்டாமல் உற்றுப் பார்த்தார் என்றும் கூறுவதுண்டு. அக்கி என்பது கண்களைக் குறிக்கும். இதனை ‘மகாவம்சதிகா’ என்னும் நூலில் விளக்கமாகக் காணலாம்."}}