{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "nwgbsf3v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/nwgbsf3v/", "kind": "article", "headword": "அகழிப் போர்", "romanization": "akaḻip pōr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.259299+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அகழிப் போர் என்பது முதல் உலகப் போரின் போது நடைமுறைப் படுத்தப்பட்ட ஒருவகைப் போர் முறையாகும்.", "body_ta": "அகழிப் போர் என்பது முதல் உலகப் போரின் போது நடைமுறைப் படுத்தப்பட்ட ஒருவகைப் போர் முறையாகும். செருமானியர் பிரான்சு நாட்டில் போரிட்டபோது சாபரே என்ற படைத்தலைவர் தம் படைவீரர்களுக்கு ஊக்கமூட்டினார். பகைவர்களுக்குப் பணிவதை விடப் போர் செய்து மடிவதே மேல் என்று அவர் தம் வீரர்களுக்குக் கூறி, அவர்களை மாரன் ஆற்றங்கரைக்கு நடத்திச் சென்று செருமானியர்களுடன் போரிட்டார். இப்போருக்குப் பின் செருமானியரின் முன்னேற்றம் தடைப்பட்டது. அகழிப்போர் முறை தொடங்கியது. ஆழமான பள்ளங்களில் மறைந்து கொள்வதும் திடீரென வெளிப்பட்டுப் போரிடுவதும் ஆகிய இம்முறையால் செருமானியரது முன்னேற்றம் தடைப்பட்டது."}}