{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ngg782mm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ngg782mm/", "kind": "word", "headword": "சுருள் அலை வழிப்படுத்தி", "romanization": "curuḷ alai vaḻippaṭutti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:40.928534+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "help : உதவி : பலமுறைகளில் உடனடியாக கிடைக்கக்கூடிய செயல். முறைமை அல்லது நிரல் தொகுப்பு எப்படிச் செயல் படுகிறது என்பதைப்பற்றிய கூடுதல் தரவுகளைப் பயனாள ருக்கு வழங்குகிறது. சூழ் நிலைக்கு ஏற்ற வகையில் உதவுகிற விசை என்பதைப் பார்க்கவும். hełp controller : உதவித் தொகுப்பி : வாசகங்களையும், தொகுப்பி கட்டளைகளையும் ஒரு நேரடி உதவிப் பொறியமைவாக மொழி பெயர்க்கிற மென் பொருள். help menu : உதவிப்பட்டியல் : பயனாளருக்கு உதவக்கூடிய தரவுகளை திரையில் நேரடிக் காட்சியாகக் காட்டுதல். மென் பொருள் பற்றிய கேள்விகளுக்கு கட்டளைக் கையேடுகளின் துணையின்றி மென்பொருள் பயன்படுத்துவோர் பதிலளிப் பதற்கு இது உதவுகிறது. தனி யொரு விசையை (பெரும் பாலும் F1) அழுத்துவதன் மூலம் உதவிப் பட்டியல்கள் வர வழைக்கப்படுகின்றன. henry : ஹென்றி (மின் தூண்டல் அலகு) : மின் வலிமையை அளப்பதற்கான அலகு. ஒரு ஹென்றி என்பது, ஒரு இணைப்பில் உள்ள மின்சாரத் தினால் ஒரு வோல்ட் மின் இயக்க சக்தியைப் பெறுகிற மின் இணைப்பின் மின் வலிமை ஆகும். அம்மின்சக்தி ஒரு வினாடிக்கு ஒரு ஆம்பியர் என்ற அளவில் மாறுபடுகிறது. hercules adapter : ஹெர்குலஸ் தகவமைவு : ஒரு நிறப்படச் செய்தி அறிவிப்பியில் உயர்ந்த செறிவளவுகளில் வரைகலை களைக் காட்சியாகக் காட்டுகிற ஒரு மென்பொருள் பொறியமைவு. hercules card : ஹெர்குலஸ் அட்டை உயர்செறிவளவு ஒளிப்பேழை (செய்தி அறி விப்பி) கட்டுப்படுத்தி அட்டை. இது பெரும்பாலும், உயர் செறி வளவு ஒரு நிறப்படக் காட்சி யில் பயன்படுத்தப்படுகிறது. hercules graphics : ஹெர்குலஸ் வரைகலை ஹெர்குலஸ் கம்ப்யூட்டர் டெக்னாலஜி\" என்ற அமைவனம் சொந்தக் கணினிகளுக்காகத் தயாரித்துள்ள ஒளிப் பேழைக் காட்சித் தர அளவு. இந்த அமைவனம், 720 x 348 படக்கூறுகள் கொண்ட செறி வளவுடன் நிறப்பட வரைகலை களையும், வாசகங்களையும் தயாரிக்கிறது. hermaphroditic : இருபாற்கூறுகளுடைய : நீட்டப்பகுதியும், செருகு பகுதியும் ஒருங்கேயுடைய இணைப்பி. இது ஆண் பகுதி தனியாகவும், பெண் பகுதி தனியாகவும் உள்ள இணைப்பி களிலிருந்து வேறுபட்டது. hertz ஹெர்ட்ஸ் (அதிர்வெண் அலகு) : ஒரு விநாடிக்கான மின்காந்த அலைச் சுற்றுகள் அல்லது சுழற்சிகள். சுருக்கமாக Hz என்று அழைக்கப்படுகிறது. heruistic programme : தன் மேம்பாட்டுச் செயல்வரைவு : ஒரு செயல்முறை ஒவ்வொருமுறை ஒடும்போதும் தன் சொந்தச் செயல்களின் விளைவுகளிலிருந்து கற்றுக் கொண்டு, அடுத்த தடவை தனது பணியை மேம்படுத்துவதற்குத் தக்க மாற்றங்களைச் செய்து கொள் ளும் வகையில் எழுதப்பட்டுள்ள செயல்வரைவு. heterogeneous environment : கதம்பச் சூழல் பல்வேறு தயாரிப்பாளர்கள் தயாரித்துள்ள சாதனம். heuristic : பட்டறிவு சார்ந்த : பிரச்சினை ஒன்றுக்கு தீர்வு காண்பதற்கான ஆய்வு வழி. இம்முறையில் இறுதி முடிவுகளை அடைவதற்கான ஒவ் வொரு நடவடிக்கையையும் படிப்படியாக மதிப்பிட்டு தீர்வு எட்டப்படுகிறது. கண்டுபிடிப்பு ஒன்றில் உதவும் பொதுவான அறிவின் பயன்பாடு பற்றியது. Algorithm என்பதற்க்கு எதிர் நிலையானது. heuristic learning : பட்டறிவு வழி கற்றல் : அனுபவத்திலிருந்து கண்டுபிடிக்கும் வழி. தங்கள் தவறுகளில் இருந்து கணினிகள் கற்றுக்கொள்ளும் வழி. தங்கள் நடவடிக்கைகளில் இருந்து, வெற்றியைத் தராத, பயனைத் தராத நடவடிக்கைகளை நீக்குதல். Hewlett-Packard : ஹீவ்லெட்- பேக் கார்ட் : கலிபோர்னியாவிலுள்ள மின்னணுவியல் கருவிகள், கணிப்பிகள், கணினிகள் உற்பத்தியாளர்கள். பெயர்ச் சுருக்கம் : HP. hexadecimal : பதினாறிலக்கமுறை : \"16\"- ஐ ஆதாரமாகக் கொண்ட எண்மான முறை. இதனை \"அறுபதின் மானம் (Hexadecimal) என்றும் கூறுவர். hexadecimal notation : பதிளாறிலக்கக் குறிமானம் பத்து களுக்குப் பதிலாக பதினாறு களைக் கொண்ட குறிமானம். இதில், 0 முதல் 9 வரையிலான இலக்கங்கள் பயன்படுத்தப் படுகின்றன. A, B, C, D, E, F, என்ற எழுத்துகள் 10, 11, 12, 13, 14, 15 என்ற எண்களைக் குறிக்கின்றன. பதின்மானக் குறிமானத் தில் ஒரு நான்கு இலக்க எண் ணில் ஒவ்வொரு இலக்கமும் ஆயிரங்கள். நூறுகள், பத்துகள், ஒன்றுகள் ஆகியவற்றைக் குறிக் கின்றன. பதினாறிலக்கக் குறி மானத்தில் ஒவ்வொரு இலக்க மும் 09டுகள், 256கள், 16கள், ஒன்று கள் ஆகியவற்றைக் குறிக் கின்றன. இவ்வாறு A60B = (10 x 163) + (6 x 162) + (0 x 161) + (11 x 160) = (10 x 4096) + (6 x 256) + (0 x 16) + (11 x 1) = 40960 + 1536 + 0 + 11 = 42507 (பதின்மானம்) கணினிகளில் பதினாறிலக்க முறை பயன்படுத்தப்படுவதற்குக் காரணம், எண்களைச் சேமித்துவைக்கும் முறை யாகும். ஈரிலக்க முறையில் 0 முதல் 9 வரையிலான இலக்கங்களைச் சேமிக்க 0000 முதல் 0101 வரையிலான இலக்கங்கள் தேவை. இதனால் நமது இயல்பு எண்களுக்கு நான்கு ஈரிலக்க எண்களைப் பயன்படுத்த வேண் டும். ஆனால் நான்கு ஈரிலக்க இலக்கங்களைக் கொண்டு 0 முதல் 9 வரையில் மட்டுமின்றி 0 முதல் 15 வரையிலும் சேமிக்க லாம். அதாவது, 0000 முதல் 1111 வரைச் சேமிக்க முடியும். எனவே, பதினாறிலக்க முறை யில், கணினியிலுள்ள சேமிப்புக் குறியீடுகள், அனைத்தையும் நாம் பயன்படுத்தலாம். hexadecimal number : அறுபதின்ம எண் : ஒற்றை இலக்கத்துக்கும் கூடுதலான எண். ஒரு மொத்தத் தொகையைக் குறிப்பது. அதில் ஒவ்வொரு எண்ணும் அளவை 16 இன் மூலத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடப்படுகிறது. பயன்படுத்தப்படும் எண்கள். 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, A, B, C, D, E & F. hexadecimal point : அனுமதியின்றி புள்ளி : அறுபதின்மக் கலவை எண் ஒன்றில் முழு எண்ணையும் பின்னப் பகுதிகளையும் பிரித்துக்காட்டும் மூலப்புள்ளி. அறுபதின்ம எண் 3F மற்றும் 6A7இல் அறுபதின்மப் புள்ளி எண்கள் 'F' -க்கும் 6-க்கும் இடையே உள்ளது. HGC plus : ஹெச்ஜிசி பிளஸ் : ஹெர்க்குலிஸ் கம்ப்யூட்டர் டெக்னாலஜி நிறுவனம் 1986ஆம் ஆண்டு அறிமுகப்படுத் திய 36 ஒளிக்காட்சித் தகவி அட்டை. இதில், 256 எழுத்து களை 12 எழுத்துருக்களில் இருத்தி வைக்கக் கூடுதலான இடைநிலை நினைவகம் கொண்டது. வரைகலை வடி விலான எழுத்துருக்களை பெற முடியும். HHOK : ஹெச்ஹெச்ஓகே ஹா, ஹா. சும்மா விளையாட்டுக்கு என்று பொருள்படும் Ha, Ha Only Kidding என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மின்னஞ்சல் மற்றும் நிகழ்நிலை (online) தகவல் தொடர்புகளில் நகைச்சுவையை அல்லது குறும்புத் தனத்தை வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் சொல். hide : மறை : ஒரு பயன்பாட்டு மென்பொருள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அதன் இயக்கச் சாளரத்தை மறைத்து வைத்தல். இயக்க முறைமையின் ஒரு குறிப்பிட்ட கட்டளையைத் தந்தவுடன் மறைக்கப்பட்ட சாளரம் மீண்டும் தோற்றமளிக்கும். hidden codes : மறைநிலை குறியீடுகள் : நேரடித் திரை உரு வமைவுச் செயல்முறை மூலம் ஒர் ஆவணத்தில் இணைக்கப்பட்டுள்ள மறைநிலை வாசக உருவமைவுக் குறியீடுகள். hidden file மறைநிலைக் கோப்பு : ஒரு கோப்புப் பட்டியலில் பார்வைக்குக் காட்டப்படாத ஒரு கோப்பு. எடுத்துக் GTLG) MS-DOS; VAX DIR з), сраг МS-DOSG) se to SYS, DOS-SYS என்பவை மறைமுகக் கோப்புகள். hidden-line algorithm : மறைகோட்டு படிநிலை நடைமுறை : வரைபடம் வரைவதில், ஒரு முப்பரிமாணப் பரப்பு வரையப் படும்போது எந்தக் கோடுகள் கண்ணுக்குப் புலனாகக் கூடாது என்பதைத் தீர்மானிக்கப் பயன் படுத்தப்படும் ஒரு படிநிலை நடைமுறை.' hidden line removal : மறை கோடு நீக்குதல் : திட முப்பரி மாணம் உடையதாக காட்சிக்கு வைக்கப்பட்ட ஒரு பொருளைக் காணும்பொழுது மறைக்கப் படக்கூடிய கோட்டுப் பகுதி களை படத்திலிருந்து நீக்குதல். கணினி வரைபட மென் பொருள்களும், வன்பொருள் களும் அத்தகைய மறைந்துள்ள கோடுகளை தானாகவே நீக்கக் கூடிய திறனைப் பெற்றுள்ளன. hidden lines : மறைநிலை வரிகள் : ஒரு முப்பரிமாணப் பொருளை திரையில் காட்டும் போது, பொருளின் பொருண்மையினால் பார்வையாளர் பார்வையிலிருந்து மறைக்கப் பட்டிருக்கும் வரி. திரையில் பின்புல வண்ணங்களில் வரையப்படும் கோடுகள். அந்த வண்ணங்கள் மறையும்வரைக் கண்ணுக்குப் புலனாவதில்லை. ஒரு வரைபடத்தில் கண்ணுக்குப் புலனாகாத கோடுகள்.", "needs_definition": false, "gloss_en": "helical wave guide", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 689"}]}}