{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "n9wfa2tj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/n9wfa2tj/", "kind": "article", "headword": "ஆக்ஸ்போர்டு", "romanization": "ākspōrṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.238489+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆக்ஸ்போர்டு இங்கிலாந்தில் லண்டனுக்குச் சுமார் 50 மைல் வடமேற்கே தேம்ஸ் ஆற்றங்கரையில் அமைந்துள்ள புகழ் மிக்க பழைய நகரம்.", "body_ta": "ஆக்ஸ்போர்டு இங்கிலாந்தில் லண்டனுக்குச் சுமார் 50 மைல் வடமேற்கே தேம்ஸ் ஆற்றங்கரையில் அமைந்துள்ள புகழ் மிக்க பழைய நகரம். இங்குள்ள பல்கலைக் கழகமே இங்கிலாந்திலுள்ள பல்கலைக் கழகங்களுள் மிகப் பழைமையானதும் மிகுந்த புகழ் வாய்த்ததுமாகும். இந்நகர்ச் சுற்றுப்புறத்தில் பல மோட்டார்த் தொழிற்சாலைகள் உண்டு. மக்: 108,420 (1950)"}}