{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "my4hyb25", "url": "https://nigandu.oliyonresearch.com/e/my4hyb25/", "kind": "word", "headword": "ரேம் இறுக்கம்", "romanization": "rēm iṟukkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:19.010080+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விண்டோஸ் 3. x இயக்கமுறைமையில் பொது நினைவகம் போதாமல் போகின்ற சிக்கலுக்கான தீர்வாக பல்வேறு மென்பொருள் விற்பனையாளர்கள் மேற்கொண்ட ஒரு தொழில்நுட்பம் ரேம் நினைவகத்தின் வழக்கமான உள்ளடக்கத்தை இறுக்கிச் சுருக்குவதன் மூலம், மெய்நிகர் நினைவகத்தில் (Virtual Memory-பெரும்பாலும் நிலைவட்டு) எழுதுதல்/படித்தல் தேவை குறைகிறது. எனவே கணினியின் வேகம் அதிகரிக்கும். (ஏனெனில், ரேம் நினைவகத்தைவிட வட்டில் உள்ள மெய்நிகர் நினைவகத்தைக் கையாள்வது மெதுவாக நடைபெறும் செயலாகும்). ரேம் சிப்புகளின் விலை குறைந்ததாலும், நினைவகத்தை மிகவும் திறமையாகக் கையாளும் விண்டோஸ் 95/என்டி வருகையாலும் ரேம் இறுக்கம் என்னும் நுட்பத்திற்குத் தேவையில்லாமல் போய்விட்டது. ஒருசில பழைய கணினிகளில் பயன்படுத்தப்பட வாய்ப்புண்டு.", "needs_definition": false, "gloss_en": "RAM compression", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1208"}]}}