{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ms84uchn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ms84uchn/", "kind": "word", "headword": "சார்புக்கொள்கை", "romanization": "cārpukkoḷkai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:01.690466+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அழியாப்புகழ் பெற்ற இயற்பியல் கொள்கை, ஐன்ஸ்டின் உருவாக்கியது. நியூட்டன் விசை இயலின் திரிபுகளை விளக்க, இயக்கத் தொடர்பான பல கொள்கைகள், முன் மொழியப்பட்டன. அவை மீவுயர் சார்பு இயக்கம் பற்றியவை, அவற்றில் இரண்டு ஐன்ஸ்டின் உருவாக்கியது 1905இல் சிறப்புக்கொள்கை உருவாக்கப்பட்டது. அது முடுக்கம் பெறாநிலைகளைச் சார்ந்தது.அதன் சுருக்கம். E=mc E-ஆற்றல்,m- பொருண்மை,C-ஒளிவிரைவு).1915இல் பொதுக்கொள்கை உருவாக்கப்பட்டது. இதில் முடுக்கம் பெற்ற தொகுதிகளைச் சேர்த்ததினால், ஈர்ப்பாற்றலை அவர் பகுத்தறிய முடிந்தது. அவர் விண்ணகத்தை நாற்பருமக் கால இடத் தொடர்ச்சியாகக் கருதுகிறார். இதில் ஈர்ப்புப் புலத்தை உண்டாக்குமளவுக்குப் பொருண்மை, இடத்தை வளைக்கிறது. நியூட்டனும் ஐன்ஸ்டினும் ஈர்ப்பாற்றலுக்குத் தந்துள்ள விளக்கங்களிலுள்ள சிறுவேறுபாடுகளும், அவர்தம் இரு கொள்கைகளையும் ஆய்ந்து பார்க்க அறவியலாருக்கு ஒரு வழிவகுத்தன. காட்டாக, நியூட்டன் விசை இயல்படி புதன் என்னும் கோளின் இயக்கம் முரண்பட்டது. ஆனால், இதை ஐன்ஸ்டின் சார்புக் கொள்கை தெளிவாக விளக்குகிறது. அவர் முன்னரே உணர்ந்தவாறு, கதிரவன் அருகே செல்லும் ஒளிக்கதிர்கள், அதன் ஈர்ப்புப் புலத்தால் வளைகின்றன என்பது ஆய்வினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. கதிரவன் மறைவின் போது செய்த ஆய்வுகள் இதைப் பண்பளவில் உறுதிசெய்துள்ளன. ஆகப் பொதுக்கொள்கை என்பது நடைமுறைக் கொள்கைகளில் ஒன்று. அந்நடைமுறைக் கொள்கைகளின் பலகருத்துக்கள் இக்கொள்கைக்குப் பொதுவாய் அமைந்துள்ளமை ஒரு தனிச் சிறப்பு. எவ்வகை ஆய்வுமின்றித் தம் உய்த்துணர்வினால் மட்டுமே இவர் இக்கொள்கையை உருவாக்கியது மேலும் ஒரு தனிச்சிறப்பு. அறிவியல் வரலாற்றில் இக்கொள்கை ஓர் எல்லைக்கல் ஆகும்", "needs_definition": false, "gloss_en": "relativity, theory of", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 368"}]}}