{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "mk2saex2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/mk2saex2/", "kind": "article", "headword": "ஆர்பீலா", "romanization": "ārpīlā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:26.509143+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆர்பீலா வடகிழக்கு ஈராக்கில் மலையடிவாரத்தில் உள்ள ஒரு நகரம்.", "body_ta": "ஆர்பீலா வடகிழக்கு ஈராக்கில் மலையடிவாரத்தில் உள்ள ஒரு நகரம். இது மிகப் பண்டையது. மோசூலிலிருந்து பக்தாதிற்குப் போகும் வழியில் உள்ளது. இவ்விடத்தில்தான் அலெக்சாந்தர் பாரசீக மன்னனான டரையசைத் தோற்கடித்ததாகக் கருதி, அப்போரை ஆர்பீலாப் போர் என்று கூறுவது சிலர் மரபு. ஆனால் உண்மையில் அப்போர் நிகழ்ந்தது கோகமாலா என்னுமிடத்தில்தான்."}}