{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "m45k6qs4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m45k6qs4/", "kind": "article", "headword": "ஆக்காட்ஸ்க் கடல்", "romanization": "ākkāṭsk kaṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:23.916836+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆக்காட்ஸ்க் கடல் (Okhotsk sea) சோவியத் யூனியனுடைய கீழ் எல்லையாகப் பசிபிக் சமுத்திரத்திலுள்ளது, அயிரம் மைல் நீளமும், அறுநூறு மைல் அகலமும் உள்ளது.", "body_ta": "ஆக்காட்ஸ்க் கடல் (Okhotsk sea) சோவியத் யூனியனுடைய கீழ் எல்லையாகப் பசிபிக் சமுத்திரத்திலுள்ளது, அயிரம் மைல் நீளமும், அறுநூறு மைல் அகலமும் உள்ளது. நவம்பர் முதல் ஏப்ரல் வரை பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும். சிறு நதிகள் வந்து சேர்கின்றன. இது வியாபாரக் கப்பல்கள் போவதற்குப் பயன்படுகிறது. பரப்பு: சு. 5,82,000 ச. மைல், மிக அதிக ஆழம் 10,554 அடி."}}