{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kzhez2jw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kzhez2jw/", "kind": "word", "headword": "விரிதாள் நிரல்", "romanization": "viritāḷ niral", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:34.336458+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வரவு-செலவுத் திட்டம், நிதிநிலை அறிக்கை, முன்கணிப்பு மற்றும் பிற நிதி தொடர்பான பணிகளைச் செய்வதற்கென உருவாக்கப்பட்ட மென்பொருள் தொகுப்பு. தரவு மதிப்புகள் கட்டம் கட்டமான கலங்களில் எழுதப்படுகின்றன. வாய்பாடுகள் மூலம் தரவுகள் உறவுபடுத்தப்படுகின்றன. ஒரு கலத்தில் இருக்கும் மதிப்பினை மாற்றினால் தொடர்புடைய அனைத்துக் கலங்களிலுமுள்ள மதிப்புகள் மாற்றப்படும். விரிதாள் பயன்பாடுகள் பெரும்பாலும் வரைபட வசதிகளை யும் கொண்டிருக்கும். உரை, எண் மதிப்புகள் மற்றும் வரைபடங்களுக்கான எண்ணற்ற வடிவமைப்பு (formating) வசதிகளைக் கொண்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "spreadsheet programme", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1369"}]}}