{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "khqzj33a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/khqzj33a/", "kind": "article", "headword": "சுருக்குப் பொருத்து", "romanization": "curukkup poruttu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:57.964511+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "எந்திர உறுப்புகளை, அதன் இயல்பான அளவிலிருந்து சுருக்கிப் பின் அழுத்தத்துடன் பொருத்துவது சுருக்குப் பொருத்து (shrink fit) எனப்படும், சுருக்குப் பொருத்த வகையில் துளையின் விட்டம், தண்டின் விட்டத்தை விடக் குறைவாக இருக்கும்.", "body_ta": "எந்திர உறுப்புகளை, அதன் இயல்பான அளவிலிருந்து சுருக்கிப் பின் அழுத்தத்துடன் பொருத்துவது சுருக்குப் பொருத்து (shrink fit) எனப்படும், சுருக்குப் பொருத்த வகையில் துளையின் விட்டம், தண்டின் விட்டத்தை விடக் குறைவாக இருக்கும். இதை உயர் அழுத்துப் பொருத்தம் (heavy force fit) எனவும் கூறலாம். தண்டுகள் துளையில் பொருத்தப் படும் முன்னர், குளிர்விக்கப்பட்டுச் சுருக்கப் படும் அல்லது துளையில் பொருத்தப்பட்டு, விரிவு படுத்தப் படும். சில பொருத்துகளில் இரண்டு செயல் முறைகளுமே செய்யப்பட்டு, தண்டுகள் துளை வாயில் பொருத்தப்படும், பின், அவை வளிம நிலைக்குத் திரும்பும் போது, மிகச் சிறந்த பொருத்தமாகி விடும்.\n\nஅழுத்துப் பொருத்தம், சுருக்குப் பொருத்தத்தைப் போலவே இருப்பினும், பொருத்தப்படும் விதத்தில் வேறுபாடு கொண்டது. அழுத்துப் பொருத்தத்தில் துண்டுகள் துளைகளில் அழுத்தத்துடன் பொருத்தப் படும். அழுத்துப் பொருத்தம் பயன் படாத இடங்களில், சுருக்குப் பொருத்தம் எஃகு உலோகத்தால் ஆன நிலையான அமைவுகளிலும், தானியங்கித் தொடர் வண்டிப் பொறிகளிலும், பல எந்திர இணைவுகளிலும் பயன்படுகின்றன. —கே. ஆர். கோவிந்தன் நூலோதி. P.L. Ballaney, Theory of Machines, Fifteenth Edition, Khanna Publishers, New Delhi, 1987,"}}