{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kbcqu5ms", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kbcqu5ms/", "kind": "word", "headword": "எச்டிஎம்எல் ஆவணத்தை உருவாக்கல்", "romanization": "ecṭiemel āvaṇattai uruvākkal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:19.032070+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இந்த ஆவணங்களை உருவாக்கப் பதிப்பிப்பி (சொல்முறையாக்கி) தேவை. காட்டாகக் குறிப்புத்தாளை, சாளரங்களைப் பயன்படுத்தும் பொழுதும், டாஸ் பதிப்பிப்பி யை டாசைப் பயன்படுத்தும் பொழுதும். பயன்படுத்தலாம். நம் பணியைப் போட்டுக் காட்ட ஒரு மேய்வியும் தேவை: இணைய ஆராய்வி வலைக் காட்சிக் செலுத்தி. இணைய இணைப்பும் பயனுள்ளதாக இருக்கும். இதன் பயன்களாவன: இணையத்திலுள்ள எச்டிஎம்எல் ஆவணக் குறிமையைச் சுமை இறக்கம் செய்யவும் ஆராயவும், கிடைக்கக்கூடிய ஆவணங்களோடு இணைப்புகளை உண்டாக்கவும், இணையத்தில் நம் ஆவணங்களை வெளியிடவும் உதவும். அங்காடியில் பல மென் பொருள்கள் உள்ளன. இவை எச்டிஎம்எல் ஆவணங்களை உருவாக்க உதவுபவை. எ-டு மைக்ரோசாஃப்ட் சொல் 97, முன்பக்கம், இணையக்காட்சிக் கோப்பி, காட்டாக, மைக்ரோசாஃப்ட் சொல்லைப் பயன்படுத்தி, நம் பாடத்தைத் தட்டச்சு செய்து படிவமைப்பு செய்யலாம். படத்தை ஒட்டலாம், ஆவணத்தை எச்டிஎம்எல் ஆவணமாகச் சேமிக்கலாம். இது தானாகவே நமக்குத் தேவைப்படும் ஒத்தமையும் குறிமையை உருவாக்கும்.", "needs_definition": false, "gloss_en": "HTML document, creation of", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 119"}]}}