{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ka5kcyuh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ka5kcyuh/", "kind": "article", "headword": "ஆக்சஸ் ஆறு", "romanization": "ākcas āṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:23.991375+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆக்சஸ் ஆறு சோவியத் நடு ஆசியாவிலுள்ளது.", "body_ta": "ஆக்சஸ் ஆறு சோவியத் நடு ஆசியாவிலுள்ளது. அமுதாரியா என்றும் அழைக்கப் பெறும். பாமிர் பீடபூமியில் உற்பத்தியாகி ஆரல் கடலில் போய்ச் சேருகிறது; 1500 மைல் நீளமுடையது. பெரும்பாலும் ஆழம் குறைவு. பாசனக் கால்வாய்கள் பல வெட்டப்பட்டுள்ளன."}}