{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "k28gbg2x", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k28gbg2x/", "kind": "article", "headword": "அகோராத்திரமூர்த்தி", "romanization": "akōrāttiramūrtti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:31.454716+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "சிவமூர்த்தங்களுள் ஒன்று. சத்ததந்து என்னும் அசுரனைக் கொல்லச் சிவபெருமான் மேற்கொண்ட கோலமாகும்.", "body_ta": "சிவமூர்த்தங்களுள் ஒன்று. சத்ததந்து என்னும் அசுரனைக் கொல்லச் சிவபெருமான் மேற்கொண்ட கோலமாகும். சத்த தந்து என்பவன் தக்கனைப் போல் வேள்வி செய்ய அதில் தேவர் பலர் அவிகொள்ளச் சென்றனர். அதனால், அவ்வேள்வியை அழிக்கச் சிவபெருமான் எண்ணி, ஆகாயத்தைத் தேராகவும், வாயுவைக் குதிரையாகவும், அக்கினியை வில்லாகவும், சந்திரனை நாணாகவும், நீரை அம்பாகவும் கொண்டு தேவரை விரட்டி யாகத்தை அழித்ததாகக் கூறப்படுகிறது. சிவபெருமானது ஆயுதம் ஒன்றையும் இப்பெயரால் குறிப்பர்."}}