{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "jpbjkqv3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/jpbjkqv3/", "kind": "word", "headword": "இரும்புக் குண்டு எறிதல்", "romanization": "irumpuk kuṇṭu eṟital", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:42.821145+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரும்பு அல்லது பித்தளையால் அல்லது அதற்கு இணையான வேறு எந்தப் பொருட்களினாலாவது உருண்டை வடிவமானதாகவும், மழமழப்பாகவும் வழ வழப்புள்ளதாகவும் இரும்புக் குண்டு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆண்கள் போட்டிக்குரிய எடை 16 பவுண்டு (7.260 கி.கி) பெண்களுக்கு 8 பவுண்டு 13 அவுன்ஸ் (4.000 கி. கிராம்) 8;அடி ஆரமுள்ள வட்டம். 4 அடிநீளம் 4.5 அங்குல அகலமும் 2 அங்குல கனமும் உள்ள தடைப் பலகை (Stop board) ஒன்றும் பாதிக்கப்பட்ட அமைப்புதான் குண்டு எறியும் பரப்பாகும். இரும்புக் குண்டை ஒரு கையால் அதுவும் தோளின் முன் புறப் பகுதியிலிருந்து தொடங்கி தான் எறிய வேண்டும். (Put) தோளுக்கு பின்புறமிருந்து கொண்டு வந்து இரும்புக் குண்டை எறிவது (Throw) தவறான எறியாகும். எறிபவரது கால், தடைபலகை உட்புரத்தைத் தொடலாம். ஆனால் அதன் மேற் புறத்தை மிதிக்கவோ, தாண்டவோ கூடாது. ஒவ்வொரு எறியாளருக்கும் 8 வாய்ப்புக்கள் உண்டு. 57. ஓட்டக் காலணி (Spike) காலணிகள் எந்த விதத்திலும் ஓடுவதற்கு அல்லது தான்டுவதற்குத் தூண்டுகின்ற சாதனங்களைக் (Spring) கொண்டதாக அமைந்திருக்கக் கூடாது. எல்லாவிதமான உபகரணங்களைக் கொண்டிருந்தாலும் அவை 5 அங்குலம் கனத்திற்கு மேல் அமைந்ததாகவும். காலணியின் அடித்தட்டிலுள்ள முன்பாகத்தை விட குதிகால் பாகம் 0.25 அங்குலத்திற்கு மேல் கனமுள்ளதாகவும் இருக்கக் கூடாது. பந்தயக் காலணியில் (Spike) உள்ள ஆணிகளின் எண்ணிக்கை மொத்தம் 8, அவை முன் தட்டில் 6ம் பின் தட்டில் 2ம் என்ற எண்ணிக்கையுடன் இருப்பதுடன் 1 அங்குல உயரமும் 0.16 அங்குல அகலத்திற்கு மிகாமலும் இருக்கவேண்டும். 58. ஓடவிடும் அதிகாரி (Starter) ஓட்டப் பந்தயங்கள் தொடர்பான எல்லா நிகழ்ச்சிகளுக்கும் இவரே பொறுப்பேற்று, உடலாளர்களை ஒட விடுகிறார். ஓட்டத் தொடக்கத்தை பற்றிய தவறுக்கும் இவரே பொறுப்பாளர் 200மீ 400 மீ ஓட்டங்களுககு உடலாளர்கள் பார்க்கும்படியான இடத்தில் நின்றுதான் அறிவிப்பு தந்து ஓடவிட வேண்டும். துப்பாக்கியால் அல்லது விசிலால் ஒலி செய்து ஓட விடலாம். ஒட விடுவதற்கு முன்னர் தலைமை ஓட்ட நடுவர் மற்றும் தலைமை நேர கண்காணிப்பாளர் இவர்களுக்குத் தெரிவித்து, அவர்களின் சம்மதம் பெற்ற பிறகே ஓட வேண்டும்.", "needs_definition": false, "gloss_en": "Shot Put", "period": "", "register": "technical", "domain": "ஓடுகளப் போட்டிகள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-sports-terms", "title": "Sports terms dictionary, S. Navaraj Chelliah", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 121"}]}}