{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hxp6fy3r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hxp6fy3r/", "kind": "word", "headword": "செல்லிட வானொலி", "romanization": "celliṭa vāṉoli", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:59.924224+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "முழு நிலப் பரப்புக்கும் அதிக சக்தியுள்ள நிலையான வானொலி நிலையம் அமைப்பதற்குப் பதிலாக சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து சேவை அளிப்பது. ஒருசில கிலோ மீட்டர்கள் மட்டுமே கேட்பதாக அவை இருக்கும். நடமாடும் தொலைபேசியின் தேவை அதிகரிப்பதால் கல அமைப்பின்மூலம் நிலைமையை ஈடு கட்டலாம். பல இயங்கும் சேவைகள், குறும் பகுதிக்குள் கொண்டுவரப்பட்டு கலத்தின் அளவு குறைக்கப்படுகிறது. ஒவ்வொரு கலத்திலும் தனி பல்லிணைப்பு அலைவரிசை பரப்பி வாங்கி ஆகியவை அமைக்கப்படுகின்றன. பரப்பிகட்கு குறைவான மின்சக்தியே தேவைப்படுகிறது. இதனால் வானொலி அலைவரிசைக் கற்றை (பாண்டு) களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி சில நூறு பேர்களுக்குப் பதிலாக பல்லாயிரவர் பயன் பெறமுடியும்", "needs_definition": false, "gloss_en": "cellular radio", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 232"}]}}