{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hqkgc8xw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hqkgc8xw/", "kind": "word", "headword": "இணைய நாகரிகம்", "romanization": "iṇaiya nākarikam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:05.564407+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிணைய நாகரிகம் என்று பொருள்படும் Network Etiquette என்பதன் சுருக்கச் சொல். மின்னஞ்சல் மற்றும் யூஸ்நெட் (செய்திக் குழுக்கள்) கட்டுரைகள் போன்ற மின்னணுச் செய்திகளை அனுப்பும்போது கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நெறிகள் பற்றிய கோட்பாடுகள். இணைய நாகரிகத்துக்கு ஒவ்வாத செயல்பாடுகள் சில: சர்ச்சைக்குரிய கருத்துகள் மன உணர்வுகளைப் புண்படுத்தும் செய்திகள் தனிப்பட்ட முறையில் சாடுதல் - தொடர்பில்லாத ஏராளமான குப்பைச் செய்திகளை அனுப்பி வைத்தல் ஒரு திரைப்படம், தொலைக்காட்சிப் படம், புதினம் போன்றவற்றின் கதைமுடிவை முன்பே அறிவித்துவிடல் தீங்கு விளைவிக்கும் செய்திகளை மறை யாக்கம் செய்யாமல் வெளியிடல் -தொடர்பில்லாத அஞ்சல் குழுவுக்கு தொடர்பில்லாத செய்திகளை அனுப்புதல்", "needs_definition": false, "gloss_en": "net history", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 309"}]}}