{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hex3gbzc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hex3gbzc/", "kind": "word", "headword": "ஆய்வேடு", "romanization": "āyvēṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:50.717906+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு கணினியில் அல்லது ஒரு பிணையத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை கணினியிலேயே பதிவு செய்து வைத்துக்கொள்ளும் குறிப்பேடு. ஒரு தரவு தொடர்பு பிணையத்தில் நடைபெறும் செய்திப் பரிமாற்றங்களைக் குறித்து வைத்துக்கொள்ள இக்குறிப்பேடு பயன்படும். ஒரு தரவுத்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள விவரங்களை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளைக் குறித்து வைத்துக் கொள்ள முடியும். ஒரு கணினி அமைப்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கோப்புகளின் விவரங்கள், அவ்வப்போது நீக்கப்பட்ட கோப்புகளின் விவரங்கள் இவற்றையும் கண்காணித்துக் குறித்துக் கொள்ளலாம். சேமித்து வைக்கப்பட்ட தரவுகளுக்கு இழப்பு அல்லது பழுது ஏற்படுமாயின், இதற்கு முன் நடந்த நிகழ்ச்சிகளைப் பரிசீலித்து மூலத்தரவுகளை மீட்டுருவாக்கம் செய்ய, பொதுவாக இக் குறிப்பேடு பயன்படுகிறது.", "needs_definition": false, "gloss_en": "journal", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தாளிகை", "குறிப்பேடு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 808"}]}}