{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "henat5u6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/henat5u6/", "kind": "word", "headword": "இயங்குநிலை இடைமாற்று", "romanization": "iyaṅkunilai iṭaimāṟṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:24.954776+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அடிக்கடி கையாள வேண்டிய தகவல்களை உடனடியாக எடுத்தாள வசதியாக, முதன்மை நிவைகத்திலுள்ள தரவுகளை நுண்செயலி தனக்கருகில் ஒர் இடைமாற்று நினைவகத்தில் (cache memory) வைத்துக்கொள்ளும். இதனால் கணினியின் செயல்பாட்டு வேகம் அதிகரிக்கும். மிக அண்மையில் பயன்படுத்திய தரவுவை இடைமாற்று நினைவகத்தில் வைத்துக் கொள்ளல் நிகழ்நேர இடைமாற்று எனப்படுகிறது. இடைமாற்று நினைவகத்தின் கொள்திறன் அடிப்படையில் இப்பணி மேற் கொள்ளப்படுகிறது. குறிப்பாக, தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பயன்பாட்டுத் தொகுப்புக்கு எவ்வளவு நினைவகப் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படையில் இல்லாமல், எவ்வளவு நினைவகப் பகுதி கையிருப்பில் உள்ளது என்ற அடிப்படையில் இடைமாற்று நினைவகக் கொள்ளளவு தீர்மானிக்கப்படும்.", "needs_definition": false, "gloss_en": "dynamic caching", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["நிகழ்நேர இடைமாற்று"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 497"}]}}