{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "hchd2rsj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/hchd2rsj/", "kind": "word", "headword": "மின்ஒளிர்வு திரைக்காட்சி", "romanization": "miṉoḷirvu tiraikkāṭci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:59.172316+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மடிக் கணினிகளில் பயன்படுத்தப்படும் தட்டை வடிவத் திரைக்காட்சியில் ஒருவகை.செங்குத்து மற்றும் கிடைமட்ட மின்வாய்களுக்கு (electrodes) இடையே ஒரு பாஸ்பர் அடுக்கு அமைக்கப் பட்டிருக்கும்.மின்வாய்கள் எக்ஸ்-ஒய் ஆய அச்சுகளாகச் செயல்படுகின்றன.இரண்டு மின்வாய்களும் மின்னூட்டம் பெறும்போது, அவற்றின் குறுக்குவெட்டுப் புள்ளியில் அமைந்த பாஸ்பரஸ் ஒளியை உமிழும்.மின்ஒளிர்வுத் திரைக் காட்சி ஏனைய காட்சித் திரை களைவிட விரிவான பார்வைக் கோணத்தையும் தருகின்றன.தற்போது இத்தகைய காட்சித் திரை களுக்குப்பதில் இயங்கணி (active matrix) எல்சிடி திரைகள் பயன்படுத்தப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "electroluminescent display", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 166"}]}}