{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "h2xphp6y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/h2xphp6y/", "kind": "article", "headword": "ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்", "romanization": "ākspōrṭu palkalaikkaḻakam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.249641+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இங்கிலாந்திலுள்ள பல்கலைக் கழகங்களுள் மிகப் பழமையானது.", "body_ta": "ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இங்கிலாந்திலுள்ள பல்கலைக் கழகங்களுள் மிகப் பழமையானது. லண்டனுக்கு வடமேற்கில் ஐம்பது மைல் தூரத்திலுள்ள ஆக்ஸ்போர்டு பட்டணத்திலுள்ளது. எப்போது தோன்றியது என்பது தெளிவாகத் தெரிய வழியில்லை. 1214 முதலே பல்கலைக் கழக அமைப்புடையதாம். இப்போது இருபத்திரண்டு கல்லூரிகள் இதைச் சார்ந்தவை. 1881 முதல் பெண்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டு வருகிறார்கள். ஆயினும் 1920 முதலே பட்டங்கள் தரப்படுகிறார்கள். பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் பிரசங்கம் செய்வர். மாணவர் படிக்க வேண்டியவை, பரீட்சை கொடுக்க வேண்டிய ஆகியவைவற்றை ஆசிரியர் குறிப்பிடுவார். பிரசங்கத்தைக் கேட்டே தீரவேண்டுமென்னுங் கட்டாயமில்லை. ஆண்டுதோறும் ஏறக்குறைய ஐயாயிரம் மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். இங்குள்ள பாட்லியன் நூல்நிலையம் 1602-ல் நிறுவப் பெற்றது. அதில் 12,50,000 நூல்களும், 40,000 கையெழுத்துப் பிரதிகளும் உள."}}