{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "gspqb72c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gspqb72c/", "kind": "word", "headword": "ஆர்எச் காரணி", "romanization": "ārec kāraṇi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:37.655947+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ரீசஸ்' (Rhesus) என்னும் சிறு குரங்கு வகையிலும், மனித இனத்திலும் குருதியின் செங்குருமத்தில் காணப்படும் உறைமம் ஊக்குவிக்கும் கூறு. இது எதிர்ச் செயல்காட்டாத ஆர்எச் காரணி (RH-negative) என்றும், எதிர்ச்செயல் காட்டுகிற ஆர்எச் காரணி (RH-positive) என்றும் இரு வகைப்படும். மனிதரிடையே குருதியில் உறைமம் ஊக்குவிக்கும் கூறு செலுத்தப்படும்போது எதிர்ச்செயல் காட்டாமலிருப்பது எதிர்ச்செயல்காட்டாத ஆர் எச் காரணியாகும். எதிர் செயல் காட்டுவது எதிர்ச்செயல் காட்டும் ஆர்எச் காரணியாகும். பிறக்காத குழந்தையிடம் எதிர்செயல்காட்டும் ஆர்.எச். காரணியும் தாயிடம் எதிர்ச் செயல்காட்டாத ஆர் எச் காரணியும் இருக்குமானால், தாயின் குருதியில் பாதுகாப்பான ஆர் எச் எதிர்ப்புப் பொருள் உண்டாகிறது. இந்தப் பொருள், இரண்டாவது எதிர்ச்செயல் காட்டும் ஆர் எச் காரணியுடைய குழந்தையின் குருதிக்கு எதிராகச் செயற்பட்டு, அக்குழந்தையின் குருதியில் சிவப்பணுக்களை அழித்துவிடக்கூடும். இதனால் பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் உண்டாகும். தாயிடம் எதிர்ச்செயல் காட்டாத ஆர்எச் காரணி இருந்து, அவருக்கு முன்னர் எதிர்ச்செயல் காட்டும் ஆர்எச் காரணியுடையகுருதி செலுத்தப்பட்டிருக்குமானால், இதே விளைவு ஏற்படும்", "needs_definition": false, "gloss_en": "RH", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 532"}, {"n": 2, "definition_ta": "வழக்கமாக மனிதக் குருதியில் இருக்கும் எதிர்ப்பிகள். மகப்பேற்றின் போது தீய விளைவுகளை உண்டாக்குபவை. இக் காரணியைக் கொண்டவர்கள் ஆர்எச் நேரிடையானவர்கள். கொள்ளாதவர்கள் எதிரிடையானவர்கள். இந்தியாவில் 97% நேரிடையானவர்களும் 3% எதிரிடையானவர்களும் உள்ளனர்", "needs_definition": false, "gloss_en": "Rh factor", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 374"}]}}