{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "gkr6sbjq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gkr6sbjq/", "kind": "word", "headword": "எந்திரன்", "romanization": "entiraṉ", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:56:24.667131+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தானாக இயங்கக்கூடிய அறிவும் சக்தியும் கொண்ட ஒரு கருவி; தானியங்கி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "எந்திரன்"}, {"n": 2, "definition_ta": "மனிதர்களின் மேற்பார்வையின்றி, சுற்றுச் சூழலை உணர்ந்து, உள்ளிட்டுக் கேற்றவாறு சுற்றுச்சூழலை ஒரளவுக்கு நுண்ணறிவோடு மாற்றும் திறன்பெற்ற ஒரு பொறி. பெரும்பாலும், மனித அசைவுகளையொத்த செயல்பாடுடைய எந்திரன்களே வடிவமைக்கப் படுகின்றன. ஆனால் உருவத்தில் அவை மனிதர்களைப்போல படைக்கப் படுவதில்லை. வாகனம் மற்றும் கணினி உற்பத்தி சாலைகளில் எந்திரன்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "robot", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1264"}]}}