{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "gc8fbvmm", "url": "https://nigandu.oliyonresearch.com/e/gc8fbvmm/", "kind": "word", "headword": "பீடிஏ", "romanization": "pīṭiē", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:10.036036+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சொந்த இலக்க முறைத் துணைவன் என்று பொருள்படும் Personal Digital Assistant என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு குறுபயன் உள்ளங்கைக் கணினி. குறிப்பிட்ட சில வசதிகளை மட்டும் கொண்டது. நாட்காட்டி, குறிப்பெடுத்தல், தரவுத் தளம், கணிப்பான் போன்ற சில தனிநபர் பயன்பாடுகளையும் தகவல் தொடர்பு வசதியையும் கொண்டது. பெரும்பாலான பீடி. ஏ. க்கள் விசைப்பலகை, சுட்டி போன்ற உள்ளிட்டுக் கருவிகளுக்குப் பதிலாக பேனா அல்லது அது போன்ற சுட்டுக் கருவிகளைக் கொண்டுள்ளன. ஆனால் சிலவற்றில் பேனா தவிர தொட்டச்சு செய்யக்கூடிய மிகச்சிறிய விசைப்பலகையும் சேர்த்துப் பயன்படுத்தப்படுகின்றன. தரவுவைச் சேமித்து வைக்க, மின்சாரம் அதிகம் தேவைப்படும் வட்டு இயக்க கங்களுக்குப் பதிலாக பளிச்சிடு நினைவகத்தைக் (Flash Memory) கொண்டுள்ளன.", "needs_definition": false, "gloss_en": "PDA", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1096"}]}}