{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "fvmyt9t3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/fvmyt9t3/", "kind": "article", "headword": "அச்சுநாடுகள்", "romanization": "accunāṭukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.697890+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அச்சுநாடுகள் (Axis powers) : ஜெர்மனியும் இத்தாலியும் 1937-ல் ஒரு ராணுவ ஒப்பந்தம் செய்து கொண்டன.", "body_ta": "அச்சுநாடுகள் (Axis powers) : ஜெர்மனியும் இத்தாலியும் 1937-ல் ஒரு ராணுவ ஒப்பந்தம் செய்து கொண்டன. இவ்வொந்தப்படி இரண்டாம் உலக யுத்தம் நடந்தபோது 1940-ல் ஜெர்மனிக்கு உதவியாக இத்தாலி பிரான்சுமீது படையெடுத்தது. 1940 செப்டெம்பர் 27-ல் ஜப்பானும் இவ்விருநாடுகளோடு சேர்ந்து ராணுவ ஒப்பந்தம் செய்து கொண்டது; இது மூவரசு ஒப்பந்தமாயிற்று. இம்மூன்று நாடுகளுக்கும் அச்சு நாடுகள் என்றும், இந்நாடுகளின் உறவு முறையை ரோம்-பெர்லின்-டோக்கியோ அச்சு என்றும் கூறுவது வழக்கம். 1945 செப்டெம்பரோடு இவ்வச்சு முறிந்துபோயிற்று."}}