{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "f8p4ygkd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f8p4ygkd/", "kind": "article", "headword": "ஆகூரா மஸ்தா", "romanization": "ākūrā mastā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.349154+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆகூரா மஸ்தா சாரதூஷ்டிரரால் நிறுவப்பெற்ற மதத்தில் தலைமைக் கடவுள்.", "body_ta": "ஆகூரா மஸ்தா சாரதூஷ்டிரரால் நிறுவப்பெற்ற மதத்தில் தலைமைக் கடவுள். இந்து மதத்தில் 'அசுரர்' என்னும் சொல் தேவர்களின் பகைவர்களைக் குறிக்கிறது. அவர்கள் மதத்தில்'ஆகூரா' என்னும் சொல் பூரண அறிவு படைத்த கடவுளைக் குறிக்கிறது. ஆயினும் இவ்விரு சொற்களுக்குமிடையே தொடர்பு உண்டு என்று கருதப்படுகிறது. ஆகூரா மஸ்தா என்பது பாரசீக மொழியில் 'ஆர்மது' என்று சிதைந்து வழங்குகிறது. ஆகூரா மஸ்தா ஆதிக் கடவுளாகக் கருதப் படுகிறார் இவருக்கு எதிரிடையாக அங்கிரானமனு என்னும் சாத்தானும் உண்டு. தே. வெ. ம.]]"}}