{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "f6zdyh88", "url": "https://nigandu.oliyonresearch.com/e/f6zdyh88/", "kind": "article", "headword": "அகன்ற கழிமுகம்", "romanization": "akaṉṟa kaḻimukam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.327290+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Estuary): ஆறு கடலோடு கலக்குமிடம்.", "body_ta": "(Estuary): ஆறு கடலோடு கலக்குமிடம். இங்கு ஆற்று நீர் கொண்டுவரும் வண்டல் தங்கி முகத்துவாரத்தை அடைக்காமல் கடலிற் கலந்துவிடும். அகன்ற கழிமுகங்கள் நல்ல துறைமுகப் பட்டினங்கள் அமைவதற்கு ஏற்ற இடங்கள். உதாரணமாகத் தேம்ஸ் கழிமுகத்தில் லண்டனும், தென் அமெரிக்கவிலுள்ள பிளெட் நதிக் கழிமுகத்தில் போனஸ் அயர்ஸும் அமைந்திருப்பதைக் கூறலாம்."}}