{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "es5axhfb", "url": "https://nigandu.oliyonresearch.com/e/es5axhfb/", "kind": "article", "headword": "அக்கிரிகோலா", "romanization": "akkirikōlā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:30.433177+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அக்கிரிகோலா என்பவர் கி.பி.", "body_ta": "அக்கிரிகோலா என்பவர் கி.பி. 78 முதல் 84 வரை இங்கிலாந்தில் உரோமானிய ஆளுநராகப் பணியாற்றினார். ஆளுநராக ஆவதற்கு முன், உரோமானியப் படையில் இவர் பணிபுரிந்தார். படை வீரர்களை அணி வகுத்து வழி நடத்திச் செல்வதில் அக்கிரிகோலா (Agricola) மிக்க நேர்ச்சி பெற்றிருந்தார். தமது ஆளுநர் பதவிக் காலத்தில் தம் முன்னையோர் பெற்றிருந்த வெற்றிகளை உறுதிப்படுத்த விரும்பினார்; அதற்கான சூழ்ச்சிகள் பலவற்றையும் மேற்கொண்டார்; வட வேல்சுப் பகுதியைக் கைப்பற்றினார். மேலும் தொடர்ந்து, கிளைடு (Clyde) ஆறுகள் வரையிருந்த பகுதிகளையும் வென்றார். மேட்டு நிலப் பகுதிகளின் அடிவாரத்தில் வாழ்ந்த கலிடோனியர்களைத் தோற்கடித்தார்.\n\nஇங்கிலாந்தில் அமைதியை நிலைநாட்டி வலுவான ஆட்சியை இவர் உறுதிப்படுத்தினார். இவர் கி.பி. முதல் நூற்றாண்டில் உரோமானியக் குடியேற்ற ஆட்சிக்குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்கினார். இவர் மருமகனான தாசிடசு (Tacitus) என்ற வரலாற்றாசிரியர் இவரது ஆட்சித்திறமை பற்றிப் புகழ்ந்துள்ளார்."}}