{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ekq5qhnu", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ekq5qhnu/", "kind": "word", "headword": "டீ-சுமப்பி", "romanization": "ṭī-cumappi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:40.638271+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பொதுச் சுமப்பி வழங்குகின்ற தொலைதூர இலக்கமுறைத் தகவல் தொடர்புத் தடம். இரு முனைகளிலுமுள்ள ஒன்று சேர்ப்பிகள் பல்வேறு குரல் தடங்களை ஒன்றிணைத்து இலக்கமுறைத் தரவுத் தாரைகளாய் (Digital Data stream) அனுப்பி வைக்கின்றன. பெறு முனையில் குரல் தடங்கள் தனித்தனியே பிரிக்கப்படுகின்றன. 1993ஆம் ஆண்டில் ஏடி&டி நிறுவனம் டி-சுமப்பி சேவையை அறிமுகப்படுத்தியது. சுமந்து செல்லும் தட எண்ணிக்கையைப் பொறுத்து பல்வேறு நிலைகள் உள்ளன. டீ1, டீ2, டீ3, டீ4 ஆகியவை உண்டு. குரல் தகவல் தொடர்பு தவிர இணைய இணைப்புக்கும் டீ சுமப்பிகள் பயன்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "T-carrier", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1433"}]}}