{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ejfehnnr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ejfehnnr/", "kind": "word", "headword": "பிசிசி", "romanization": "picici", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:51.531073+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிறர் அறியா கார்பன் நகல் என்று பொருள்படும் (blind carbon copy) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். (bind courtesy copy என்றும் கூறுவர்). மின்னஞ்சலில் ஒரு மடலை பலருக்கும் அனுப்பலாம். பெறுநர் (to) முகவரி இருக்குமிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முகவரிகளைக் குறிப்பிடலாம். அல்லது CC என்ற கட்டத்துள் வேறு பலரின் முகவரிகளைக் குறிப்பிடலாம். அல்லது BCC என்ற கட்டத்துள்ளும் குறிப்பிடலாம். to, cc ஆகியவற்றில் குறிப்பிடும் முகவரிதாரர்களுக்கு இந்த மடல் வேறு யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். ஆனால், BCC யில் குறிப்பிட்டுள்ள முகவரி தாரருக்கு மடலின் நகல் கிடைக் கும். ஆனால் அந்த மடலின் நகல் வேறு யாருக்கெல்லாம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிய முடியாது", "needs_definition": false, "gloss_en": "bcc", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 140"}]}}