{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "eh5j5bbs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eh5j5bbs/", "kind": "word", "headword": "நிறம்", "romanization": "niṟam", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:51:48.712988+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "orusol-palporul-palaporul-tarum-corkal", "name_ta": "பலபொருள் தரும் சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "கண்களால் உணரும் ஒளியின் ஒரு பண்பு. இது பொருளின் பருமை அல்லது வடிவம் அல்லாத பண்பு. சில பொருள்கள் ஒளியைப் பல்வேறு அலைநீளங்களில் வெளிவிடுகின்றன, சில பொருள்கள் மீது ஒளியலைகள் பட்டுத் தெறிக்கும்போது அல்லது எதிரும்போது சில ஒளியலைகள் வெளிப்படுகின்ற. இவை கண்ணில் படும்பொழுது ஒளியின் அடர்த்தி அல்லது அளவு அல்லாமல், அதன் பிறிதொரு தன்மை அல்லது பண்பு என்பது நிறம் ஆகும். சிவப்பு, பச்சை, நீலம் முதலானவை வெவ்வேறு நிறங்கள். சிவப்பு, பச்சை, நீலம் முதலானவை ஒளியலையின் அதிர்வெண் அல்லது அலைநீள மாறுபாட்டால் வேறு வேறு தன்மைகள் உடையனவாகக் கண்கள் உணர்கின்றன. பறவைகள், பட்டாம்பூச்சிகள் போன்ற பல உயிரினங்கள் மாந்தர்களால் காணமுடியாத நிறாங்களைக் காணவல்லன.", "needs_definition": false, "gloss_en": "colour, color", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நிறம்"}, {"n": 2, "definition_ta": "ஏதொன்றிலும் வேறுபாடு அல்லது வகைகள் (இவை ஓளியோடு தொடர்பில்லா, வகைப்பாடு). வெவ்வேறு தன்மை, பண்பு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நிறம்"}, {"n": 3, "definition_ta": "சாயம் (துணி முதலானவற்றில் ஏற்றும் பண்பு)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நிறம்"}, {"n": 4, "definition_ta": "இசை, இசைப்பண்புகளில் வேறுபாடு; பண்களில் வேறுபாடு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நிறம்"}, {"n": 5, "definition_ta": "ஒளி", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நிறம்"}, {"n": 6, "definition_ta": "இயல்பு, தன்மை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நிறம்"}, {"n": 7, "definition_ta": "மார்பு, வண்ணம், குணம், உயிர்நிலை, நடுவிடம், உடல், தோல், வர்ணம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 254"}, {"n": 8, "definition_ta": "வன்னம், இயல்பு:வெண் மை, கருமை, செம்மை, பொன் மை.பசுமை என 5. அறிவியல் 7 நிறங்களைக் கூறும். ஊதா, அவுரி,நீலம், பச்சை, மஞ்சள், கிச்சிலி, சிவப்பு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 178"}, {"n": 9, "definition_ta": "பார்வைக் கதிர்வீச்சின் அலைநீளத் தொடர்பாகக் கண் - மூளை மண்டலத்தில் உண்டாக்கப்படும் உடலியல் உணர்ச்சி. மரபு நிலை வழியில் பார்க்க பார்வை நிறமாலை ஏழு நிறங்களாலானது. வேறுபட்ட அலைநீளங்களைக் கொண்ட ஒற்றை நிறக் கதிர்வீச்சுகளுக்குக் கலப்பு நிறங்கள் என்று பெயர். கலப்பு நிறத்தோடு வெண்ணொளியைச் சேர்க்க. அது நிறைவுறா நிறமாகும் அதற்குப் பெயர் சாயல் நிறம். வழக்கமான மூன்று முதன்மை நிறங்களாவன, பச்சை, சிவப்பு, நீலம். இவற்றைக் கலந்து எவ்வகை நிறத்தையும் பெறலாம். வெள்ளொளி என்பது பார்வைக் கதிர்வீச்சுகளின் இயல்புக் கலவையாகும். சிவப்பு நிறம் ஒரு பொருளால் மறிக்கப்படுவதால் அது சிவப்பாகத் தெரிகிறது. ஒரு பொருள் எல்லா நிறங்களையும் உறிஞ்சும்பொழுது கறுப்பாகவும் வெளிவிடும் பொழுது வெள்ளை யாகவும் தெரியும். இரு நிறங்களைச் சேர்த்து வெள்ளை உணர்ச்சியை உண்டாக்குவதற்கு நிரப்பு நிறங்கள் என்று பெயர். இவற்றை உண்டாக்கப் பல இணைநிறங்கள் உள்ளன", "needs_definition": false, "gloss_en": "color", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 93"}, {"n": 10, "definition_ta": "நீலம் முதலிய வண்ணங்களைக் குறிப்பது. இதனை அதன் அலைநீளத்தால் உறுதி செய்தல்", "needs_definition": false, "gloss_en": "hue", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 206"}]}}