{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ds7yp5z6", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ds7yp5z6/", "kind": "article", "headword": "ஆக்சொலாட்டில்", "romanization": "ākcolāṭṭil", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.093452+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆக்சொலாட்டில் (Axolotl) வடஅமெரிக்காவிலுள்ள ஆம்பிளிஸ்டோமா என்னும் ஒரு நீர்நிலவுயிரியின் லார்வா நிலை.", "body_ta": "ஆக்சொலாட்டில் (Axolotl) வடஅமெரிக்காவிலுள்ள ஆம்பிளிஸ்டோமா என்னும் ஒரு நீர்நிலவுயிரியின் லார்வா நிலை. இந்த நிலையைக் கடந்து முதிர்ச்சி நிலை அடையாமலே இதே இளம்பருவ நிலையிலேயே இந்தப் பிராணியில் இனப் பெருக்கம் நிகழ்கிறது. இது பிள்ளைநிலை யினப் பெருக்கம் (Paedogenesis) எனப்படும். ஆக்சொலாட்டில்கள் முட்டையிலிருந்து பொரிக்கின்றன. இப்படி இனம் பெருக்கும் ஆக்சொலாட்டில்கள் சில பிராந்தியங்களில் மட்டும் இருக்கின்றன. மற்றப் பிரதேசங்களில் அவை உருமாறிச் சாதாரண முதிர்நிலையான ஆம்பிளிஸ்டோமா ஆகின்றன. பார்க்க: ஆம்பிளிஸ்டோமா."}}