{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "crkffy3c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/crkffy3c/", "kind": "word", "headword": "மெய்நிகர் சாதன இயக்கி", "romanization": "meynikar cātaṉa iyakki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:51.117080+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் ஒரு வன்பொருள் அல்லது மென்பொருள். வளத்தினை மேலாண்மை செய்கின்ற ஒரு மென்பொருள். ஒரு வளம், முதல் அணுகலுக்கும் அடுத்த அணுகலுக்கும் இடையே சில தகவல்களைத் தக்கவைத்துக் கொள்கிறது எனில் (எ-டு : ஒரு வட்டுக் கட்டுப்படுத்தியில் நிலைமைத் தகவல் மற்றும் இடையகங்கள்), அதற்கான மெய்நிகர் சாதன இயக்கி ஒன்று இருக்க வேண்டும். பொதுவாக, மெய்நிகர் சாதன இயக்கிகள் மூன்றெழுத்துப் பெயர்களாக இருக்கும். முதல் எழுத்து V ஆகவும் கடைசி எழுத்து D ஆகவும் இருக்கும். நடு எழுத்து சாதன வகையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக D என்பது திரைக்காட்சி (Display), P என்பது அச்சுப்பொறி (Printer), T என்பது நேரங்காட்டி (Timer) என இருக்கும். குறிப்பிட்ட சாதனவகை இப்போதைக்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாதது எனில் x என இருக்கும். அதாவது, மெய்நிகர் சாதன இயக்கி Vxd என இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "virtual device driver", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1539"}]}}