{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "cjuj4asv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cjuj4asv/", "kind": "word", "headword": "சுவை", "romanization": "cuvai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-22T11:47:12.982401+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "orusol-palporul-palaporul-tarum-corkal", "name_ta": "பலபொருள் தரும் சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "நாவில் (நாக்கில்) உணரும் உணர்ச்சி (இது வெப்பம், சொரசொரப்பு போன்றவை அல்லாமல், இனிப்பு, புளிப்பு, கசப்பு போன்ற உணர்வுகளைக் குறிக்கும்)", "needs_definition": false, "gloss_en": "taste", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சுவை"}, {"n": 2, "definition_ta": "அறிவியலில் அடிப்படையாக நாவில் ஐந்து சுவைகளையே சுவைகள் என ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த ஐந்து சுவைகள் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, உமாமி. (காரம், துவர்ப்பு என்பவற்றை சுவைகளாக அறிவியலில் ஏற்கப்படவில்லை)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சுவை"}, {"n": 3, "definition_ta": "நாவில் உணர்வதாக தமிழர்கள் கூறும் ஆறு சுவைகள் இனிப்பு, புளிப்பு, கசப்பு, உவர்ப்பு, காரம், துவர்ப்பு", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சுவை"}, {"n": 4, "definition_ta": "உள்ளத்தின் உணர்ச்சிகள், நெகிழ்ச்சிகள் பலவும் சுவை எனப்படும். இன்பம், துன்பம், களிப்பு, இசையின்பம் என்பன போன்ற அக உணர்வுகள்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சுவை"}, {"n": 5, "definition_ta": "தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள எட்டுவகை மெய்ப்பாடுகளாக வெளிப்படும் உணர்ச்சிகள் சுவைகள் எனப்படும். அவையாவன நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சுவை"}, {"n": 6, "definition_ta": "நாவால் உணரும் உணர்ச்சியைத் துய்(ப்பது).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சுவை"}, {"n": 7, "definition_ta": "உள்ளத்தில் உணரும் உணர்ச்சிகளைத் துய்(ப்பது). (எ.கா உங்கள் கிண்டலைச் சுவைத்தேன்)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சுவை"}, {"n": 8, "definition_ta": "வாயில் இட்டு சவை, மெல்லு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "சுவை"}]}}