{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "cjmdxshy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cjmdxshy/", "kind": "article", "headword": "அக்கிரிப்பினா", "romanization": "akkirippiṉā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:30.444961+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "என்பவன் உரோமானியப் பேரரசர் அகசுடசு (Augustus) என்பாரின் பெயர்த்தி; பேரரசனாகிய நீரோவின் தாயார்.", "body_ta": "என்பவன் உரோமானியப் பேரரசர் அகசுடசு (Augustus) என்பாரின் பெயர்த்தி; பேரரசனாகிய நீரோவின் தாயார். அரசுக்கு எதிரான ஒரு சதியில் ஈடுபட்டதால், அக்கிரிப்பினா (Agripinna) பேரரசர் கலிக்குலாவினால் நாடு கடத்தப்பட்டாள். இவள் மாமன் பேரரசனான போது, இவள் மீண்டும் உரோமாபுரிக்குத் திரும்பினாள், செல்வனும், ஆட்சிப் பேரவையின் உறுப்பினனுமான\n\nஅக்கிரிப்பினா\n\nஒருவனை இவள் கணவனாகப் பெற்றாள். செல்வத்திலும் அழகிலும் அன்றைய உரோமாபுரியில் இவளை ஒப்பாரும் மிக்காரும் இலர் என்பர்.\n\nதன் மாமனும் பேரரசனுமான கிளாடியசின் மனைவி கொலையுண்ட பின்னர், இவள் அவனையே இரண்டாம் முறை திருமணம் செய்து கொண்டாள். கினாடியசை இவள் தன் விருப்பம்போல் ஆட்டிவைத்தாள். முதல் கணவனுக்கும் தனக்கும் பிறந்த மகன் உலூசியசு (Ulysses) என்பவனை அரசப் பதவிக்கு உரிமையாக்கினாள். கிளாடியசு இறந்த பின்னர், அவனே நீரோ என்ற பேரரசன் ஆனான்."}}