{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "cd9zu24g", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cd9zu24g/", "kind": "word", "headword": "தீர்வுப் பண்பு", "romanization": "tīrvup paṇpu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:58.438825+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவுத் தள வடிவாக்கக் கோட்பாட்டில், ஒர் அட்டவணையில் ஒரு பண்புக் கூறு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புக் கூறுகள் வேறொரு பண்புக்கூறு அல்லது பண்புக்கூறுகளின் மீது செயல்முறையில் சார்ந்திருக்குமாயின், அத்தகைய பண்புக் கூறு/கூறு களை தீர்வுப் பண்பு என்கிறோம். சார்ந்து நிற்கும் பண்புக் கூறு/கூறுகளை சார்புப் பண்பு எனலாம். determinism : முன்னறி திறன் : கணினிவழிச் செயல்பாடுகளில், பலன் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்கும் திறன். ஒரு செயலாக்க முறைமையில் தகவல் எவ்வாறு கையாளப்படும் என்பதை முன்கூட்டி அறிதல். எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட உள்ளீடுகளைத் தரும்போது, குறிப்பிட்ட வெளியீட்டையே எப்போதும் தரக்கூடிய பாவிப்பு (Simulation) முன்னறியக்கூடிய பாவிப்பு (A Deterministic Simulation) எனப்படுகிறது. development cycle : உருவாக்கச் சுழற்சி; உருவாக்கப் படிநிலை : ஒரு பயன்பாட்டு மென்பொருள் தொகுப்பு உருவாக்கலில் தேவைகளை ஆய்வு செய்தல் தொடங்கி முழுமையாக்கப்பட்ட தொகுப்பை வெளிக் கொணர்வது முடிய, இடைப்படும் பல்வேறு செய லாக்கப் படிமுறைகள். பகுப்பாய்வு, வடிவாக்கம், முன்மாதிரி உருவாக்கம், நிரலாக்கம், சரிபார்ப்பு, நிறுவுதல், பராமரிப்பு போன்ற பல்வேறு படிநிலைகள் உள்ளன. device address : சாதன முகவரி : ஒரு கணினியின் ரோம் (RAM) நினைவகத்துள், நுண்செயலி அல்லது ஏதேனும் ஒரு புறச் சாதனத்தால் மாற்றியமைக்கக் கூடிய நினைவக இருப்பிடம். நுண்செயலியினால் மட்டுமே மாற்றியமைக்கக்கூடிய நினைவக இருப்பிடங்களிலிருந்து சாதன முகவரிகள் மாறுபட்டவை. புறச் சாதனங்களும் இவற்றை மாற்றியமைக்க முடியும். device, input : உள்ளீட்டுச் சாதனம். device manager : சாதன மேலாளர் : ஒரு கணினியில் வன்பொருளின் தகவமைவு அமைப்புகளை (Configuration Settings) பார்வையிடவும், மாற்றியமைக்கவும் உதவிடும் ஒரு மென்பொருள் பயன்பாட்டு நிரல். எடுத்துக்காட்டாக, குறுக்கீடுகளின் (interrupts) அடிப்படை முகவரிகள், நேரியல் (Serial) தகவல் தொடர்பின் அளபுருக்களை (Parameters) பார்க்கவோ; மாற்றவோ முடியும். device options : சாதன விருப்பத் தேர்வுகள். DIA : டயா; டிஐஏ : ஆவணப் பரிமாற்றக் கட்டுமானம் என்று பொருள்படும் (Document Interchange Architecture என்னும் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் நிறுவனத்தின் முறைமைப் பிணையக் கட்டுமானத்தில் (Systems Network Architecture-SNA) ஆவணப் பரிமாற்றம் தொடர்பாக வரையறுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள். வெவ்வேறு வகைக் கணினிகளுக்கிடையே அனுப்பி வைப்பதற்கு ஆவணங்களை ஒழுங்குபடுத்தி முகவரியிடும் வழி முறைகளை டயா வரையறுத்துள்ளது.", "needs_definition": false, "gloss_en": "determinant", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 139"}]}}