{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "c665tdyw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/c665tdyw/", "kind": "word", "headword": "பிணையத் தரவுத்தளம்", "romanization": "piṇaiyat taravuttaḷam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:05.728021+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு பிணையத்தில் செயல்படும் தரவுத் தளம். 2. ஒரு பிணையத்தின் பிற பயனாளர்களின் முகவரிகளைக் கொண்டுள்ள தரவுத்தளம். 3. தகவல் மேலாண்மையில் தகவல் ஏடுகள் ஒன்றோடொன்று ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் தொடர்பு கொண்டுள்ள ஒருவகைத் தரவுத் தளம். பிணையத் தரவுத் தளம் படிநிலைத் தரவுத் தளம் போன்றது. ஒர் ஏட்டுக்கும் இன்னோர் ஏட்டுக்கும் தொடர்ச்சியான உறவுமுறை இருக்கும். சிறிய வேறுபாடும் உண்டு. கடுமையான கட்டமைப்பு இல்லாதது. எந்தவொரு ஒற்றை ஏடும் ஒன்றுக்கு மேற்பட்ட ஏடுகளைச் சுட்ட முடியும். இரண்டு ஏடுகளுக்கிடையே ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகள் இருக்க முடியும். ஆனால் படிநிலைத் தரவுத் தளத்தில் இரு ஏடுகளுக்கு இடையே ஒரேயொரு பாதைதான். பெற்றோர் ஏட்டி லிருந்து குழந்தை ஏட்டுக்குப் பாதை உண்டு.", "needs_definition": false, "gloss_en": "network database", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 310"}]}}