{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "btpeq86u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/btpeq86u/", "kind": "article", "headword": "அக்கில்", "romanization": "akkil", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:30.472669+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "வட அயர்லாந்தின் கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு தீவு, அயர்லாந்துப் பெரு நிலப்பகுதியையும், அக்கில் (Achill) தீவையும், அக்கில் சவுண்டு (Achill Sound) என்னும் குறுகிய நீர்ப்பிரிவு பிரிக்கிறது.", "body_ta": "வட அயர்லாந்தின் கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு தீவு, அயர்லாந்துப் பெரு நிலப்பகுதியையும், அக்கில் (Achill) தீவையும், அக்கில் சவுண்டு (Achill Sound) என்னும் குறுகிய நீர்ப்பிரிவு பிரிக்கிறது. எனவே இதனை ஒரு பாலத்தால் இணைத்துள்ளனர். இது மேயோ என்னும் மாவட்டத்திற்குட்பட்டது. அங்குள்ள தூகா (Doogah), கீல் (Keel) என்னும் ஊர்களில் வாழ்வோர் மீன் பிடிக்கின்றனர். உருளைக்கிழங்கும் ஓட்சும் அங்கு வாழும் மக்களுக்கு முக்கிய உணவுப் பொருள்களாகும்.\n\nமுக்கோண வடிவில் அமைந்த இத்தீவு கீழ் மேலாக 24 கி.மீ. நீளமும், தென் வடலாக 20 கி.மீ அகலமும் உள்ளது. இதன் மொத்தப் பரப்பு 146 ச.கி.மீ. தீவின் மேற்கு ஓரத்தில் அக்கில் எட்டு (Achill-Head) என்னும் முனையுள்ளது. மலைப் பாங்கான இத்தீவின் மிக உயர்ந்த மலை முகட்டைச் சிலீன் மோர் என்பர். இதன் உயரம் 735 மீ. இதன் மக்கள் தொகை 3129 (1971)."}}