{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "btd9795k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/btd9795k/", "kind": "article", "headword": "ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்", "romanization": "āṭukōṭpāṭṭuc cēralātaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.989045+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இமயவரம் பன் நெடுஞ்சேரலாதனுடைய இரண்டாவது மகன்.", "body_ta": "இமயவரம் பன் நெடுஞ்சேரலாதனுடைய இரண்டாவது மகன். தண்டகாரணியமென்னும் ஓரிடத்திலே வடநாட்டவரால் கவரப்பட்ட பசு நிரைகளை மீட்டுத் தொண்டியில் சேர்ப்பித்ததால் இப்பெயர் பெற்றான். தன்னைப் பாடிய காக்கைபாடினியார் நச்செள்ளையார்க்கு ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும் ஈந்தவன் (பதிற். ஆறாம் பத்து)."}}