{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "b45qf8cc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/b45qf8cc/", "kind": "word", "headword": "வெடிப்பு வேகம்", "romanization": "veṭippu vēkam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:56.430395+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. வெடிப்பு முறை தரவுப் பரி மாற்றத்தில், ஒரு சாதனம் இடையூறின்றி தரவுவை அனுப்பக் கூடிய உச்ச அளவு வேகம். பல் வேறு தகவல் தொடர்புச் சாதனங்கள் வெடிப்பு முறையில் தகவலை அனுப்ப வல்லவை. வெடிப்பு முறையில் தகவல் பொட்டலங்களை அனுப்பும்போது அதன் தகவல் பரிமாற்ற வேகம் அதிகரிக்கப்படுகிறது. 2. ஒர் அச்சுப்பொறி அடுத்த வரிக்கு வராமல் ஒரே வழியில் ஒரு வினாடி நேரத்தில் அச்சடிக்கும் எழுத்துகளின் எண்ணிக்கை. தாளைத் தள்ளும் நேரம், அச்சுமுனை அடுத்தவரிக்கு வர எடுத்துக் கொள்ளும் நேரம் இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கணக்கிடப்படும் வேகம் இது. அச்சுப்பொறி உற்பத்தியாளர்கள் கூறிக் கொள்ளும் அச்சிடும் வேகம் உண்மையில் அதன் வெடிப்பு வேகத்தைத்தான். ஆனால் உண்மையில் அச்சுப் பொறியின் செயல்திறன் ஒரு பக்கம் முழுமையும் அடிக்க எடுத்துக் கொள்ளும் மொத்த நேரத்தைக் கொண்டே கணக்கிடப்படும்.", "needs_definition": false, "gloss_en": "burst speed", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 193"}]}}