{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "auz62kxq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/auz62kxq/", "kind": "word", "headword": "எதிர்கால இந்திய நிலாக்கள்", "romanization": "etirkāla intiya nilākkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:37.214652+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவை ஆண்டு வரிசைப்படி பின்வருமாறு: (1) ஒஷன்சட் 2001 (2) ஐஆர்எஸ் 2ஏ 2003. 3. ஐஆர்எஸ் (3) 2004. (4) ஐஆர்எஸ் 2பி 2005. (5) அட்மாஸ் 1 2001-2002 (6) அட்மாஸ் 2 2005 1997 பிப்ரவரி வரை 10 செயற்கை நிலாக்கள் புவியை வலம் வந்துள்ளன. 2001க்குள் 10க்கு மேற்பட்ட நிலாக்கள் வலம் வரும். 1998க்கு முன் இஸ்ரோ இந்திய வானவெளி ஆராய்ச்சியமைப்பு, காரைக்காலில் தன் முதல் டாப்ளர் வானிலை ரேடார் நிலையத்தை அமைக்கும் எனக் கூறப்பட்டது. வானிலைத் துறைக்கு இது திருத்தமாகத் தகவல்களை அளிக்கும். ஆகும் செலவு 9 கோடி. இந்திய வானவெளித்துறை வளர்ச்சியால், செய்தித் தொடர்பு, கல்வி, வாழ்நலம், பொழுது போக்கு, வானிலை, வளக் கண்காணிப்பு முதலியவற்றில் பெரும் நன்மைகள் வாணிப அளவில் ஏற்பட்டுள்ளன. நம்நாட்டுச் சிக்கல்களை நாமே முழுதும் தீர்க்குமளவுக்கு இந்திய வானவெளித் திட்டம் சீரிய முறையில் அமைந்துள்ளது. ஜாபூவா செய்தித் தொடர்பு வளர்ச்சித் திட்டத்தை இஸ்ரோ தொடங்கியுள்ளது. இது நிலாவழிச் செய்திகளை ஊரக மக்களுக்கு வழங்கும். மிக முன்னேறிய ரிசோர்சட் என்னும் வளங்காணும் நிலாவையும இந்தியா ஏவும். இஸ்ரோ, கனடா வானவெளி முகமையத்தோடு ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன்படி இரு நாடுகளும் வானவெளி ஆராய்ச்சியில் ஒத்துழைத்துப் பல நன்மைகள் பெறும். குறிப்பாகத் தொழில்நுட்ப நன்மைகளில் (செய்தி) நிலா, தொலையுணர் நிலா, வளங்காணும் நிலா அதிக நாட்டம் செலுத்தும். திருமதி கல்பனா சாவ்லா இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் பணியாற்றி வருபவர். இவர் 16.11.97 அன்று புவியைச் சுற்றி வரும் அமெரிக்க விண்வெளி ஒடமான கொலம்பியாவில் 16 நாள் பயணத்தை மேற்கொண்டார். இவருடன் ஐந்து வான வெளி வீரர்களும் சென்றனர். பா. Indian space efforts.", "needs_definition": false, "gloss_en": "future Indian satellites", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 175"}]}}