{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9yd6z4gj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9yd6z4gj/", "kind": "article", "headword": "அக்கி திம்மய்யா நாயக்கர்", "romanization": "akki timmayyā nāyakkar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:30.375612+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அக்கி திம்மய்யா நாயக்கர் என்பவர் துலுக்காண நாயக்கரின் மகன்.", "body_ta": "அக்கி திம்மய்யா நாயக்கர் என்பவர் துலுக்காண நாயக்கரின் மகன். தம் கோட்டையில் பணிபுரிந்தமைக்காகத் தனிப்பட்ட மனிதர் ஒருவருக்குத் துண்டு நிலமொன்றை மானியமாகக் கொடுத்தவர். நாயக்கர்கள் தம் பெயரில் சிற்றூர்களை நிலைநாட்டிக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தார்கள். தங்கள் விருப்பப்படி கோயில்களுக்கு நன்கொடைகள் வழங்கவும், அவர்கள் உரிமை பெற்றிருந்தார்கள். அக்கி திம்மய்யா நாயக்கர் கி.பி. 1513–ஆம் ஆண்டில் தம் பெயரிலும், தம் தந்தையார் பெயரினும் சதுர்வேதிமங்கலம் ஒன்றை நிலைநாட்டினார்."}}