{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9stj3rvq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9stj3rvq/", "kind": "word", "headword": "ஜிஎன்யு", "romanization": "jieṉyu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:37.781785+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஜிஎன்யு என்பது யூனிக்ஸ் இல்லை என்று பொருள்படும் GNU's Not Unix என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். யூனிக்ஸ் இயக்கமுறைமையை அடிப்படையாகக் கொண்ட மென்பொருள்களின் தொகுப்பினை இவ்வாறு அழைப்பர். கட்டறு மென்பொருள் நிறுமம் (Free Software Foundation) இவற்றைப் பராமரித்து Free Software Foundation என்ற பெயரில் உள்ள Free என்ற சொல் இலவசம் என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை. சுதந்தரமான, கட்டுப்பாடற்ற என்ற பொருளிலேயே பயன்படுத்தப் படுகிறது. ஜிஎன்யு மென்பொருள்கள், ஜிஎன்யு பொதுமக்கள் உரிமம் (General Public License) அடிப்படையில் வழங்கப்படுகின்றன. இதன்படி, ஜிஎன்யு மென்பொருள்களை அல்லது அதனடிப்படையில் அமைந்த மென்பொருள்களை எவரும் விலைக்கு விற்கக் கூடாது. அவற்றை வழங்குவதற்கும், பராமரிப்பதற்கும் ஆகும் செலவுகளை மட்டும் விலையாகப் பெறலாம். அது போலவே, அவற்றை வாங்கும் பயனாளர் அந்த மென்பொருள்களில் மாற்றங்கள் செய்யலாம். மாற்றம் செய்யப்பட்ட மென்பொருளை ஜிஎன்யு உரிம நிபந்தனைகளின்படியே மற்றவர்க்கு வழங்க வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "GNU", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 654"}]}}