{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "9gmd6mha", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9gmd6mha/", "kind": "word", "headword": "அகப்பொருட் கோவை", "romanization": "akapporuṭ kōvai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:54.858531+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கோவை என்பது கோக்கப் பட்ட மாலையாகும். இங்கு இன்பப் பொருள்களை ஒழுங்காகக் கோவைப்படுத்திக் கூறுவதால் இது அகப்பொருட் கோவை எனப்பட்டது. இது நாநூறு கட்டளைக் கலித்துறைகளால் தலைவன் தலைவியர் கூடிக் களவு மணத்தின் பின் கற்பு மணத்தால் மணந்து இன்புற்று இல்லறம் நடத்துதல் முதலான பலதுறைகளைக் கொண்டு விளங்குவது. நானூறு துறைகளுக்கு மேலும் பாடப்பட்ட கோவை நூல்களும் தமிழில் உண்டு. (உ-ம்) திருக்கோவையார், அம்பிகாபதி கோவை.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 436"}]}}