{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "92dt5dad", "url": "https://nigandu.oliyonresearch.com/e/92dt5dad/", "kind": "article", "headword": "அக்கிரகாரம்", "romanization": "akkirakāram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:30.419489+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "அக்கிரகாரம் என்பது பார்ப்பனர் வாழும் பகுதி.", "body_ta": "அக்கிரகாரம் என்பது பார்ப்பனர் வாழும் பகுதி. இது பார்ப்பனர்க்குக் கொடையாக வழங்கப் பெற்ற பகுதி என்று பொருள்படும், வேள்விகளைச் செய்த பார்ப்பனர்க்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்களிலிருந்து அக்கிரகாரம் தோன்றியிருக்கலாம். வேதங்களைக் கற்றுத் தெளிந்த அறிஞர்களாகவும், ஆன்மீக வழிகாட்டிகளாகவும் பார்ப்பனர் இருந்திருக்க வேண்டும். அவர்தம் பணிக்காகக் கொடுக்கப்பெற்ற ஊர்கள் அக்கிரகாரம் எனப்பட்டன. அத்தகைய நிலங்களைக் கௌடில்யர் பிரமதேய நிலங்கள் என்று குறிப்பிடுகிறார். இவற்றை இறையிலி நிலம் என்றும் கூறலாம். கொடையாகப் பெறுகிறவர் தம்மைப் பேணிக் காத்துக்கொள்ளுதற்குப் போதுமான உணவுப் பொருளை இந்நிலத்திலிருந்து பெறுவர். அவர் வரி செலுத்த வேண்டுவதில்லை. மேலும், பார்ப்பனர்க்கு அன்பளிப்பு, நன்கொடைகள், அறப்பணிகளின் பொருட்டு வழங்கப் பெற்ற நிலங்கள் ஆகியனவும் அக்கிரகாரம் என்ற சொல்லாலேயே குறிப்பிடப்பட்டுள்ளன."}}