{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8s5c799r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8s5c799r/", "kind": "word", "headword": "தரவு மறைப்பு", "romanization": "taravu maṟaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:14.211118+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தரவுக் களங்களை தனித்து இருத்த, பிரிக்க, தேதிகளைக் குறிப்பிட சாய் வெட்டுக்கோடுகள் அல்லது கிடைக் கோடுகள் பயன்படுத்தப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, நாள், மாதம், ஆண்டு இவற்றைத் தனியாகப் பிரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. 07/12/86. தொலைபேசி எண்களைக் குறிப்பிட பிறை அடைப்புக்குறிகள், கிடைக்கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. (999) 999-9999, இதே போன்ற குறியீடுகள் பகுதி எண்களைக் குறிக்கவோ, எழுத்துக் கோவையின் பரப்புத்திறனை மேம்படுத்தவோ கையாளப்படுகின்றன. இத்தகைய மூடிகளை கணினியால் செருக இயலும். அவற்றை இயக்குவோர் தானாகச் சேர்க்கவேண்டிய தில்லை. தேதிக்கான பகுதியில் 07. 1286 என்ற எண்களை மட்டும் பதிவு செய்தால்போதும். கணினி ஆணைத்தொகுப்பு சாய் கோடு களைத் தானாகச் சேர்த்து விடும். இம்முறை தரவுப் பதிவை எளிதாக்குகிறது. பணிகளைத் தரப்படுத்துகிறது. சில நிரலாக்கத் தொடர்கள் மூடியிடும் பணியை முறையாகச் செய்கின்றன.", "needs_definition": false, "gloss_en": "data field masking", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தரவுகளுக்கு மூடியிடல்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 387"}]}}