{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "8rwrk6ug", "url": "https://nigandu.oliyonresearch.com/e/8rwrk6ug/", "kind": "word", "headword": "நிற வருடுபொறி", "romanization": "niṟa varuṭupoṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:05.685256+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உருவங்களை இலக்கமாக்கிய உருவமைவாக மாற்றுகிற நுண்ணாய்வுக் கருவி. நிறத்தின் விளக்கமும் அளிக்கக்கூடியது. வருடு பொறியின் துண்மி (bit) யின் ஆழத்தைப் பொறுத்து வண்ணத்தின் செறிவும் அமையும். துண்மியின் ஆழம் என்பது வண்ணத்தை 8, 16, 24 அல்லது 32 நுண்மிகளாக மாற்றும் ஆற்றலாகும். வெளிப்பாட்டை அச் சிட வேண்டுமானால் சாதாரணமாக உயர்வகை வண்ண வருடு பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன. அக்கருவிகள் தரவுகளை உயர் தெளிவுத்திறனுடன் குறியீடாக்கவோ அங்குல வாரிப் புள்ளிக் குறிகளாகவோ ஆக்கக் கூடியவை. கீழ்மட்ட வண்ண வருடுபொறிகள் 72 அங்குல வரிப்புள்ளிகள் கொண்ட தெளிவுத்திறனுடன் குறிகளாக்குகின்றன. அச்சு செய்யக் கருதப்படாத கணினித்திரை உருவங்களை உண்டாக்க சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "colour scanner", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 277"}]}}