{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "84r53ggd", "url": "https://nigandu.oliyonresearch.com/e/84r53ggd/", "kind": "article", "headword": "ஆங்ஸ்ட்ராம்", "romanization": "āṅsṭrām", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.458614+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆங்ஸ்ட்ராம் (Angstrom) ஒளியின் அலை நீளத்தை அளவிடும் அலகு.", "body_ta": "ஆங்ஸ்ட்ராம் (Angstrom) ஒளியின் அலை நீளத்தை அளவிடும் அலகு. நிறமாலை (த.க.) அளவுகளில் முதன் முதலில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகளில் ஒருவரது பெயரால் இது வழங்குகிறது. இது 10-10 மீட்டர் நீளமுள்ளது. சோடிய ஆவி வெளிவிடும் ஒளியின் நிறமாலையில் மஞ்சள் நிறவரையின் அலைநீளம் 5,390 ஆங்ஸ்ட்ராம்கள்."}}