{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7snu4a66", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7snu4a66/", "kind": "word", "headword": "ஜாவா குறுநிரல்", "romanization": "jāvā kuṟuniral", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:50.196210+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஜாவா மொழியில் இருவகையான நிரல்கள் உருவாக்கப்படு கின்றன. ஒன்று பயன் நிரல் (Application). மற்றது குறுநிரல் (Applet). இது ஒரு ஜாவா இனக் குழு (class). ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு ஜாவா பயன்பாட்டுத் தொகுப்பு. இந்த ஜாவா இனக்குழுவினை தன்னுள் ஏற்றிக் கொண்டு அதிலுள்ள கட்டளைகளை நிறைவேற்றுகிறது. இணைய உலாவி, குறுநிரல் நோக்கி ஆகியவை குறுநிரல்களை ஏற்றி இயக்க வல்லவை. எடுத்துக் காட்டாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், நெட்ஸ்கேப் நேவிக்கேட்டர், ஹாட் ஜாவா போன்ற இணைய உலாவிகள் ஜாவா குறுநிரல்களை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து இயக்கும் திறன் பெற்றவை. ஜாவா குறுநிரல்கள் பெரும்பாலும் ஒரு வலைப்பக்கத்தின் பல்லூடக (பின்னணி இசை, நிகழ்நேர ஒளிக்காட்சிப் படம், அசைவூட்டங்கள், கணக்கீடுகள் மற்றும் ஊடாடு விளையாட்டுகள்) விளைவுகளை இணைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. பயனாளரின் தலையீடின்றி தாமாகவே இயங்கும்படி குறு நிரல்களை அமைக்க முடியும். அல்லது வலைப் பக்கத்திலுள்ள சின்னத்தின்மீது சுட்டியால் சொடுக்கும்போது இயங்கும் படியும் குறுநிரலை அமைக்கலாம்.", "needs_definition": false, "gloss_en": "java applet", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 803"}]}}